டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் ஏற்கனவே எச்சரித்திருந்தார். இதன்படி, கூடுதல் தொகை வசூலித்த ஊழியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 2,000 ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறினால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



