கருத்து வேறுபாடுகளை களையுமா தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்...?
வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இன்று அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் சந்திக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, நாளை காங்கிரஸ் மற்றும் விசிக தலைவர்களையும் அமைச்சர்கள் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

