தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 365 நாட்களும் தொடர்ந்து செயல்படுவதற்கான அனுமதியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
இந்த அனுமதியைப் பெறும் நிறுவனங்கள் சுழற்சி முறையில் ஊழியர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டுமே பணி நேரம் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. மேலும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை நிறுவனங்கள் செய்து தர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


