கம்யூனிஸ்டுகளை கணக்கெடுக்க அரசு அதிகாரி கூறியது தொடர்பாக, அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் நேரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனை அமைச்சர்கள் நேற்று சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக, இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகத்தை அமைச்சர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.


