தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, பல இடங்களில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள 255 எண் கொண்ட மதுக்கடை உட்பட பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த புதிய கொள்கையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

