காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 92.39 அடியாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 9,709 கன அடி என்ற அளவில் நீடிக்கிறது.
