காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் விரிவான பதிலளிக்க உள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே.
பழனிசாமி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளிக்கவுள்ளார். முதல்வரின் இந்த பதில் மீதான எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
சமூக வலைதளங்களிலும் இது குறித்த விவாதங்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன.
