சென்னையில் கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவை இன்று முதல் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததால், இந்த வழித்தடத்தில் இரவு நேர ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தன.
தற்போது சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இரவு நேர மின்சார ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
