சாலைகள் அமைப்பதும் தொழிற்சாலைகளை உருவாக்குவதும் மட்டுமே ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் ஆகாது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒவ்வொரு குடிமகனும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வதே உண்மையான வளர்ச்சி என்று அவர் குறிப்பிட்டார். பயமில்லாமல் மக்கள் வாழ்வதே ஒரு மாநிலத்தின் உண்மையான முன்னேற்றம் என அவர் தனது பதிலுரையில் வலியுறுத்தினார்.

