திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு வராது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறியதற்கு முதலமைச்சர் விஜய் விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். தான் அவ்வாறு கூறவில்லை என்றும், மக்களுக்கு சாவு வராது என்றுதான் குறிப்பிட்டதாகவும், சாவு வரட்டும் என்று தான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


