நெல்லை அருகே பிளஸ்-2 மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளி ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், சின்னக்குட்டி என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. அதன்படி, ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொருவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

