தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 28 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடர், 170 மணி நேர அலுவல் பணிகளுடன் முடிவுக்கு வந்தது.
இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதங்கள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் அமைச்சர்களின் பதிலுரைகள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

