இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை மீறி, இளையராஜா தொடர்ந்து தனது பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாகக் கூறி சரிசம நிறுவனம் இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. நீதிமன்றத் தடையை மீறும் இளையராஜாவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, அதிகாரியை நியமித்து அதை விற்பனை செய்ய வேண்டும் என அந்த நிறுவனம் மனுவில் கோரியுள்ளது.

