சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார், கடந்த 2025 ஜூன் மாதம் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், ஏற்கனவே 6 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி தாமோதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் இரண்டு காவலர்கள் என புதிதாக சேர்க்கப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த 4 பேரையும் வரும் 16-ம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம், அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி உள்ளிட்ட மொத்தம் 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

