முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இன்று 585 பேருந்துகளும், நாளை 1,255 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தொடர்ந்து, வரும் 12-ம் தேதி 1,030 மற்றும் 650 பேருந்துகள் என இரு கட்டங்களாக இயக்கப்படவுள்ளன.
இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 240 பேருந்துகளும், வரும் 13-ம் தேதி 105 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

