தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் வெயில் கடுமையாக பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருச்சியில் 103 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது. பாளையங்கோட்டை, கரூர் பரமத்தி, தஞ்சாவூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் மற்றும் நாமக்கல்லில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




