மிசா குறித்துப் பேசியபோது முதலமைச்சர் வெளிப்படுத்திய உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். எந்தவொரு சூழலிலும் ஒருவரின் தன்மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவது நாகரிகமான செயல் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிசா காலத்து அரசப்பயங்கரவாதம் குறித்து நாடே அறிந்திருக்கும் நிலையில், அதுபோன்ற சூழலில் திமுக தலைவர் குறித்து தவறான கருத்துகளைப் பதிவு செய்தது கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




