தமிழக அரசு புதிய துறையை உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த சமய அறநிலையங்கள் துறை, இனி 'இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை' எனத் தனித்துச் செயல்படும்.
இந்தத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகம் கொண்டுவரப்படும். இதற்கான கூடுதல் பொறுப்பைத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் கவனிப்பார் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.



