சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த சமய அறநிலையங்கள் துறை, இனி ‘இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற பெயரில் தனித்து இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் புதிய துறை உருவாக்கம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய துறையின் செயலாளராக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன் கூடுதலாகப் பொறுப்பேற்பார் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


