பணி நேரத்தில் பணியில் இல்லாத அரசு ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் வழங்கப்படாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. 'நோ வொர்க் நோ பே' (No Work No Pay) என்ற அடிப்படையில் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படுகிறது.
அலுவலகத்திற்கு வருகை பதிவு செய்துவிட்டு பணியில் இல்லாத ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.




