எச்சில் பழம் பொறுக்கும் அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது! ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் சாக்கடைக் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
-DMK IT wing
அவசரநிலை பிரகடனத்தின் போது, மிசா (MISA) சட்டத்தின் கீழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. 1976-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவில், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், திமுகவின் செயல்பாட்டாளராக இருந்து சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கருத்துகளைப் பரப்புவதாகவும் அந்த ஆவணத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், மாநில அரசின் தோல்விகளுக்கு மத்திய அரசைப் பொறுப்பாக்கி மக்களைத் தூண்டிவிடுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராகச் செயல்படுவதாகவும், பொது அமைதியைப் பாதிக்கும் வகையில் கருத்துகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி, 1971-ஆம் ஆண்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டத்தின் (MISA) கீழ் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஆவணத்தில் கூடுதல் காவல்துறைத் தலைவர் மற்றும் காவல் ஆணையரின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது.

