பிரிக்ஸ் அமைப்பு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாகவே அது செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர், இந்த அமைப்பு தற்போது புதிய அடையாளத்தைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.


