டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். பிரிக்ஸ் அமைப்பு எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உலகளாவிய ரீதியில் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தெற்குலக நாடுகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


