இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது. ஸ்ரேயாஸ் அய்யர் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, சொந்த மண்ணில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.
இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி வரும் 15-ம் தேதியும், மூன்றாவது போட்டி 17-ம் தேதியும் நடைபெற உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 18 முறை இந்தியாவுடன் மோதியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், ஜஸ்பிரித் பும்ரா, அக்ஷர் பட்டேல் உள்ளிட்ட வீரர்களும், ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராகிம் ஜட்ரன், ரஷித் கான், முகமது நபி உள்ளிட்ட முக்கிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.





%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F04%2Fkockviratkohli-2026-09-04-12-47-22.jpg&w=3840&q=75)