17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா!
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் அடையாளமாக மீனாட்சி அம்மன் கோயில் திகழ்வதாக குறிப்பிட்ட அவர், அனைவரது வாழ்விலும் நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


