தாராளபுரம் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் பேசியதாக, மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்திடம் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அவர் நேரில் மனு அளித்தார்.
மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு தற்காலிக தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




