தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் தலைமைச் செயலகத்திலும் மின்சாரம் தடைபட்டிருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
மின்வெட்டு சிக்கலைச் சமாளிக்க மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு அறிவித்த பிறகும், மின்தடைகள் தொடர்வது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

