தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டைச் சமாளிக்கும் நோக்கில், வெளிச்சந்தையில் இருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக கடந்த வாரம் டெண்டர் கோரப்பட்டது.
இந்த டெண்டர் நடைமுறையில், ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.31.99 முதல் ரூ.37 வரை கொள்முதல் செய்ய வாய்ப்புகள் இருந்த நிலையில், இறுதியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மின் தேவையை ஈடுசெய்யும் வகையில் மொத்தம் 4,500 மெகாவாட் மின்சாரத்தை இவ்வாறு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

