சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் சி.வி.சண்முகம் மற்றும் தங்கமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் அதிமுக இழந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து ஆலோசனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


