ஈரோடு மாவட்டம் பெரும்பாளி கிராமத்தில், பட்டியலினத்தவர் ஒருவரின் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
காவல்துறையினர் முன்னிலையிலேயே இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாற்று சமூகத்தினரின் காலில் விழுந்து, பட்டியலின மக்கள் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

