புதிதாகத் திறக்கப்பட்ட பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் தடத்தில் ஒரே நாளில் 25,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் சேவை வெறும் 5 மணிநேரத்திற்குள் இத்தனை பயணிகளைச் சென்றடைந்துள்ளது.
பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இந்த மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, மாலை 4 மணி முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த ரயில் சேவை இயக்கப்பட்டது.

