முதல்வர் விஜய் நாளை பிற்பகலில் ஆந்திரா பயணம் மேற்கொள்கிறார். அங்கு மாலை 4.15 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அவர் நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம் செய்கிறார். தனது ஆந்திரப் பயணத்தை முடித்துக்கொண்டு, அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.

