முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எதிரான ஊழல் வழக்கை பதிவு செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை என காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அரசுத் துறை செயலாளரின் ஒப்புதலுடன் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தனது பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தவறானது என காவல்துறை மறுத்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 177 புகார்கள் வந்துள்ளதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி ஊழல் வழக்கை பதிவு செய்ய முடியாது என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

