வாக்காளர் பட்டியலைச் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைக்கு எதிராக, ராகுல் காந்தி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தத் திருத்தப் பணிகள் தொடர்பான முழுமையான ஆவணங்களை வெளியிட வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் முடிவெடுக்கும் செயல்முறையைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



