வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மீட்புப் பணிகள், மருத்துவ முகாம்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அவர் விரிவாக ஆய்வு செய்தார்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் நீர் தேக்கம் குறித்த நிலவரங்களை முதல்வர் கேட்டறிந்தார். மண்டல வாரியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய அவர், பொதுமக்களின் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
முன்னதாக, மழைக்காலக் கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி வரும் அரசு ஊழியர்களின் சேவையைப் பாராட்டி அவர்களை அவர் ஊக்குவித்தார்.





