தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, அடுத்த ஒரு வாரத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5. 8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்த தாழ்வு பாதை நீடிப்பதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 20) புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை நீடிக்கும்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களிலும் கனமழை தொடரும். அக்டோபர் 21-ஆம் தேதி தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான முதல் கனமழையும் பெய்யக்கூடும். அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். இதற்கிடையே, அக்டோபர் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் கேரளா - கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.
மீ வேகத்திலும், இடையிடையே 55 கி. மீ வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ள நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் அதிகபட்சமாக 184.
0 மி. மீ மழை பதிவாகியுள்ளது.




