முரசு புயல் கரையை கடந்த நிலையில், அதன் தாக்கத்தால் வடமாநிலங்களுக்குச் செல்லும் பல ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆந்திராவின் நெல்லூர் மற்றும் ஒங்கோல் இடையே முரசு புயல் கரையை கடந்தது. தற்போது புயல் விஜயவாடா அருகே மையம் கொண்டுள்ளதால், பாதுகாப்பு கருதி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.




