2024 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான அமெரிக்க அரசியல் சூழலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருந்த நாட்டின் பல பகுதிகள் தற்போது ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளன. ஈரான் உடனான போர் குடியரசுக் கட்சியினருக்குப் பெரும் அரசியல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டொனால்ட் டிரம்பின் இடைக்காலத் தேர்தல் தோல்விக்குத் தாங்களே காரணம் என ஈரான் உரிமை கோரியுள்ளது. போர்க்களத்திலும் ஹார்முஸ் நீரிணையிலும் அவருக்கு ஒரு வியூக ரீதியான தோல்வியையும், வாஷிங்டனில் ஒரு அரசியல் தோல்வியையும் தாங்கள் வழங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.



