பூமியிலிருந்து சுமார் 26 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாயேஜர் 1 விண்கலம், அங்கிருந்து சிக்னல்களை வெற்றிகரமாக பூமிக்கு அனுப்பியுள்ளது. கடந்த நவம்பர் 18-ம் தேதி ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த இந்த விண்கலம், நவம்பர் 19 அன்று ஸ்பெயினில் உள்ள நாசா ஆண்டெனாக்களுக்குத் தகவல்களை அனுப்பியது. 1977-ல் விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்கலம், 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வருகிறது.
தற்போது வாயேஜர் 1 விண்கலம் மணிக்கு 61,000 கிலோமீட்டர் வேகத்தில் Gliese 445 நட்சத்திரத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆற்றல் குறைந்து வருவதால், மின்சாரத்தைச் சேமிக்கும் நோக்கில் விண்கலத்தில் உள்ள அறிவியல் கருவிகளில் இரண்டு மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன. 2012-ஆம் ஆண்டில் சூரிய மண்டலத்தின் எல்லையைக் கடந்து விண்கலம் விண்வெளி ஆய்வில் புதிய மைல்கல்லை எட்டியது.
வாயேஜர் 1 உடன் வாயேஜர் 2 விண்கலமும் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வருகிறது. தொழில்நுட்பச் சவால்களுக்கு மத்தியிலும், மனிதகுலத்தின் விண்வெளி ஆய்வுப் பயணத்தை இந்த விண்கலங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தி வருவது அறிவியலின் மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.






