கர்நாடகாவின் குடகு, சிக்மகளூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. அதேபோல், வயநாடு உள்ளிட்ட கபினி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
தொடர் மழையினால் கபினி அணை அடுத்த ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அதன் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். இதேபோல், ஹேமாவதி அணைக்கும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தீவிர மழையினால் அதிகப்படியான நீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்






