கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், அரக்கோணத்தில் இருந்து வந்த 34 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையின் காரணமாக இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



