கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொழுபுழா தாலுகாவில் உள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இடுக்கி, பத்தனம்திட்டா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கனமழை நீடிப்பதால், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அபாயம் குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



