அசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள பாமுன்புகுரி தேயிலைத் தோட்டத்தில், தனது செல்லப் பிராணியைக் காப்பாற்ற முயன்ற ஹிரிதிப் என்ற சிறுவன் ஜூலை 19 அன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். சிறுவனின் தந்தை அவனை மீட்க முயற்சி செய்தும், வெள்ளத்தின் வேகம் காரணமாக சிறுவன் நீரில் மூழ்கினான். எனினும், அந்த நாய் உயிர் பிழைத்தது.
இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளக் காலங்களில் பெற்றோர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிறுவனின் தாயார் கேட்டுக்கொண்டார். மேலும், பாதிப்புக்குள்ளாகும் கிராமங்களில் படகு வசதி உள்ளிட்ட பேரிடர் மீட்பு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அசாமில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 82 ஆக உயர்ந்துள்ளது. ஐந்து மாவட்டங்களில் சுமார் 1.92 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு குறைந்து வரும் நிலையில், 17 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 379 கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளன. 12,000-க்கும் மேற்பட்ட மக்கள் 54 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்



