குடகு, சிக்கமகளூரு மற்றும் வயநாடு பகுதிகளில் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபினி அணை ஏற்கனவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்படுகிறது. ஹாரங்கி அணையிலிருந்தும் உபரி நீர் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
குடகு பகுதியில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.எஸ் அணைக்கு தற்போது வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூருவில் உள்ள ஹேமாவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால், அந்த அணைக்கும் நீர்வரத்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹேமாவதி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 5 முதல் 10 நாட்கள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் தீவிரம் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




