கனமழை காரணமாக சபரிமலை செல்லும் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் திருவிதாங்கூர் தேவசம் போர்டு எச்சரித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சபரிமலைக்குத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் தங்கள் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி நிரபுத்திரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி பக்தர்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், தற்போதைய வானிலை சூழலைக் கருத்தில் கொண்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

