தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு நிதியாக ரூ.4,466 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 28 மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், தமிழகத்திற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிப்பகிர்வு பட்டியலில் உத்தரபிரதேசத்திற்கு அதிகபட்சமாக ரூ.19,208 கோடியும், பீகாருக்கு ரூ.10,845 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ.8,010 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


