இரு மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் நீர் அரசியல் இனி நீர்த்துவிடும் என இயக்குநர் சீனு ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இயற்கை விதியின்படி தருபவர், பெறுபவர் என யாரும் இல்லை என்றும், வாழ்ந்தவர் மற்றும் மடிந்தவர் மட்டுமே உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் நிராகரிக்கும்போது, இந்த பிரபஞ்சம் அவர்களை அரவணைத்துக்கொள்வதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

