இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1'ஐ வெற்றிகரமாக ஏவிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், தற்போது தனது சொந்த ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுதளம் பயன்பாட்டுக்கு வரும்போது, இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா தளத்தைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம், நிறுவனமே சொந்தமாகத் தேதியை முடிவு செய்து ராக்கெட்டுகளை ஏவ முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

