எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எந்தவொரு பெண்ணின் பெயரையும் குறிப்பிடவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அவரது பேச்சைத் திரித்து மாற்றிக் கூறி பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாளை சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை திசைதிருப்பும் செயல் என்றும், பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது தற்போதைய அரசின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

