சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்துள்ளது. காலை நேரத்தில் சவரனுக்கு 1,280 ரூபாயும், மாலை நேரத்தில் 960 ரூபாயும் என மொத்தம் 2,240 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 13,480 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,07,840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளி விலை காலையில் கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாயாக இருந்த நிலையில், மாலை நேரத்தில் எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

